உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே திரைப்படமாக வெளியாகும் துரந்தர், துரந்தர் 2

ஒரே திரைப்படமாக வெளியாகும் துரந்தர், துரந்தர் 2

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் துரந்தர். இந்த படம் 1300 கோடி வசூலித்தது. அதையடுத்து கடந்த மார்ச் 19ம் தேதி அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துரந்தர் 2 படம் இதுவரை 1,434 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் துரந்தர் மற்றும் துரந்தர் ரிவெஞ்ச் ஆகிய முழு கதையை ஒரே தொடர்ச்சியான சினிமாவாக வழங்குவதற்கு அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 7 மணி 30 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியிடுகிறார்கள். இந்த படத்திற்கு மூன்று இடைவேளைகள் விடப்படுகிறது. ஹாங்காங்கில் முதலில் இதை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வாரத்தில் சில காட்சிகள் மட்டுமே என்கிற ரீதியில் குறைவான எண்ணிக்கை கொண்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இந்தியாவிலும் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !