சல்மான்கான் படத்தில் அரவிந்த்சாமி, அனில் கபூர்?
ADDED : 172 days ago
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடப்பள்ளி இயக்கத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தில் ராஜூ ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இணைந்துள்ளார் . இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது என குறிப்பிட்டிருந்தனர். தற்போது இந்த படத்தில் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் ஹிந்தி நடிகர் அனில் கபூர் என இருவரும் நடிக்கவுள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.