உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாஸ் ஏஞ்சல்ஸில் ரன்பீர் கபூருக்கு பரிசாக வழங்கப்பட்ட அயோத்தியா ராம் மந்திர் மேலாடை

லாஸ் ஏஞ்சல்ஸில் ரன்பீர் கபூருக்கு பரிசாக வழங்கப்பட்ட அயோத்தியா ராம் மந்திர் மேலாடை


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான 'அனிமல்' அதைத்தொடர்ந்து கடந்த வருடம் 'துரந்தர்', பின்னர் இந்த வருடம் 'துரந்தர் 2' என தொடர்ந்து பாலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகி வருகின்றன. இதை தொடர்ந்து அடுத்ததாக அந்த அளவிற்கு ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 'ராமாயணா' டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தங்க நூலிழையில் ஜரிகை வேலைபாட்டுடன் கூடிய அயோத்தியா ராம் மந்திர் மற்றும் அதன் பின்பக்கத்தில் கடவுள் ராமரின் உருவம் ஆகியவை நெய்யப்பட்டிருந்த கோட் ஒன்று பரிசளிக்கப்பட்டது. எதிர்பாராத இந்த பரிசால் ரன்பீர் கபூர் ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ளார் என்பதை இது குறித்து சோசியல் மீடியாவில் வெளியான வீடியோ ஒன்றில் பார்க்க முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !