தாய் மற்றும் சகோதரருடன் ஜப்பானுக்கு சுற்றுலா கிளம்பி சென்ற ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் வரை முன்னணி நடிகையாக நடித்து, பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததும் கடந்த 2022ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர்களது திருமண வாழ்க்கை நான்கு வருடங்களைக் கூட தாண்டாத நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த நிலையில் இந்த விவாகரத்து டென்ஷனில் இருந்து எல்லாம் விடுபட்டு மன அமைதிக்காக தற்போது ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார் ஹன்சிகா. கூடவே அவரது சகோதரரையும் அவரது தாயையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டும் வருகிறார் ஹன்சிகா. இதற்கு முன்னதாக ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியும் தனது இரண்டு வருட திருமண வாழ்க்கையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் இருந்து பிரிந்து வாழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.