உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை ஆல்பம் மூலம் தமிழுக்கு வரும் விஷாகா

இசை ஆல்பம் மூலம் தமிழுக்கு வரும் விஷாகா

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் விஷாகா திமான். சண்டிகரை சேர்ந்த மாடல் அழகியான இவரை சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். “தேரா வேணுகா” என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஏராளமான இசை ஆல்பங்களில் ஆடியுள்ள விசாகா “டேஞ்சர் குயின்” என்ற ஆல்பத்தின் மூலம் பிரபலமானார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் 'ஹார்ட்குள்ள' என்ற இசை ஆல்பத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த ஆல்பத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். விகாஷ் நாகராஜ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ளது. கானா சல்லு பாடல்களை எழுதியுள்ளார். அனுபமா பாடியுள்ளார், ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாத் புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரபாத் கிராந்தி ரெட்டி தயாரித்திருக்கிறார். சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !