உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸிற்கு தயாராகும் ‛பார்ட்டி, அக்னிச் சிறகுகள்'

ரிலீஸிற்கு தயாராகும் ‛பார்ட்டி, அக்னிச் சிறகுகள்'

தயாரிப்பாளர் டி. சிவா தனது அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் தயாராகி உள்ள இரு படங்கள் ‛பார்ட்டி', ‛அக்னிச் சிறகுகள்'. இவற்றில் பார்ட்டி படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஜெய், சிவா, ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அக்னிச் சிறகுகள்' படத்தை ‛மூடர்கூடம்' நவீன் இயக்க, விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக் ஷரா ஹாசன் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் படப்பிடிப்பு நிறைவு பெற்றும், பல வருடங்களாக ரிலீஸாகாமல் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மீது இருந்த பைனான்சியல் பிரச்னைகளை தயாரிப்பாளர் சிவா சரி செய்து வருகிறாராம். இதனால் இந்த இரண்டு படங்களையும் மே மாதத்திற்குள் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இரு படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !