கர படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?
ADDED : 165 days ago
போர் தொழில் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ‛கர' என்ற படத்தை இயக்கி உள்ளார். தனுஷ் உடன் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஏப்., 30ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து இதற்கான புரொமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஏப்ரல் 19ம் தேதியன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.