உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் முதல் வார ஓடிடி ரிலீஸ் : அனைத்தும் புதுவரவுகள் தான்....!

ஏப்ரல் முதல் வார ஓடிடி ரிலீஸ் : அனைத்தும் புதுவரவுகள் தான்....!

ஏப்ரல் மாதம் அனைவருக்கும் ஸ்பெஷல் தான். இந்த மாதத்தின் தொடக்கமான முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

வடம்
புதுமுக இயக்குநர் வி.கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல், நடிகை சங்கீதா, நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், 'ஆடுகளம்' நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வடம்'. மஞ்சுவிரட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை(ஏப்ரல் 3ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஹேய் பகவான்
தெலுங்கு இயக்குநர் கோபி அச்சாரா இயக்கத்தில், சுஹாஸ் மற்றும் ஷிவானி நாகரம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹேய் பகவான்' (hey Bhagwan). காமெடி திரைப்படமான இந்த படம் மார்ச் 31ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

யூபோரியா (Euphoria)
தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கத்தில், சாரா அர்ஜுன், பூமிகா சாவ்லா, கவுதம் வாசுதேவ் மேனன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'யூபோரியா(Euphoria ). த்ரில்லர் கதையம்சம் கொண்ட அந்த படம் இன்று( ஏப்ரல் 2ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சம்ப்ரதாயினி சுப்பினி சுத்தபூசனி (Sampradayaini Suppini Suddapusaani)
தெலுங்கு இயக்குநர் சுதீர் ஸ்ரீராம் இயக்கத்தில் சிவாஜி, லயா மற்றும் மாஸ்டர் ரோகன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'சம்ப்ரதாயினி சுப்பினி சுத்தபூசனி(Sampradayaini Suppini Suddapusaani)'. நகைச்சுவை கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் நாளை(ஏப்.3ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மிருத்யுஞ்சய் (Mrityunjay)
தெலுங்கு இயக்குனர் ஸ்ரீ ஹுசைன் ஷா கிரண் இயக்கத்தில், ஸ்ரீ விஷ்ணு, ரீபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மிருத்யுஞ்சய்(Mrityunjay)'. இந்த படம் நாளை(ஏப்.3ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

வெல்லப்பம் (Velleppam)
மலையாள இயக்குநர் பிரவீன் ராஜ் பூக்கடன் இயக்கத்தில், அக்ஷய் ராதா கிருஷ்ணன், நூரின் ஷெரீப் மற்றும் ரோமா அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ' வெல்லப்பம் (Velleppam)'. காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் நாளை(ஏப்.3ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

லவ் பாலிசி (Love Policy)
தெலுங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 'லவ் பாலிசி (Love Policy)'. காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் வரும் (ஏப்.5ம் தேதி) ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஹேப்பி படேல் : கதர்னக் ஜாசூஸ் ('Happy Patel: Khatarnak Jasoos)
பாலிவுட் இயக்குநர் வீர் தாஸ் மற்றும் கவி சாஸ்திரி இயக்கத்தில் மோனா சிங் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோரும் நடித்துள்ள திரைப்படம் ' ஹேப்பி படேல்: கதர்னக் ஜாசூஸ் ('Happy Patel: Khatarnak Jasoos)'. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று(ஏப்.1ம் தேதி) வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !