2026ன் மூன்றாவது, இரண்டாம் பாகப் படமாக 'காளிதாஸ் 2' நாளை ரிலீஸ்
தமிழ் சினிமாவில் முதல் பாகப் படங்களுக்கு, வெற்றி கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் பாகப் படங்கள் என நிறைய படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த வருடத்தில் தமிழில் இதற்கு முன்பாக 'திரௌபதி 2, ஹாட் ஸ்பாட் 2 மச்' ஆகிய இரண்டு இரண்டாம் பாகப் படங்கள் வெளிவந்துள்ளன. மூன்றாவது இரண்டாம் பாகப் படமாக 'காளிதாஸ் 2' படம் நாளை வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் 2019ம் ஆண்டு வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள். முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக உள்ள இரண்டாம் பாகப் படங்களாக, “7 ஜி ரெயின்போ காலனி 2, ஜெயிலர் 2, மூக்குத்தி அம்மன் 2, சர்தார் 2, பிசாசு 2,” ஆகிய படங்கள் உள்ளன. மூன்றாம் பாகப் படமாக 'டிமாண்டி காலனி 3', நான்காம் பாகப் படமாக 'காஞ்சனா 4' ஆகிய படங்களும் இந்த வருடத்தில் வெளியாக உள்ளன.