ஏப்., 4ல் ‛பேட்ரியாட்' டிரைலர் ரிலீஸ்
ADDED : 12 hours ago
மம்முட்டியும், மோகன்லாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள படம் பேட்ரியாட். மகேஷ் நாராயணன் இயக்கி உள்ள இந்த படத்தில் பஹத்பாசில், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த பேட்ரியாட் படத்தின் டிரைலர் குறித்த ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால். அதில், இந்த படத்தின் டிரைலர் ஏப்ரல் நான்காம் தேதி மாலை 6 மணிக்கு கேரளா எர்ணாகுளத்தில் உள்ள கவிதா திரையரங்கில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இப்படத்தின் ட்ரைலர் திருச்சூரில் உள்ள ராகம் தியேட்டரிலும் வெளியாகிறது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மம்முட்டி பங்கேற்கிறார். முன்னதாக இப்படம் ஏப்., 23ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 1க்கு தள்ளி வைத்துள்ளனர்.