உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷ் ஹாப்பி

மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷ் ஹாப்பி


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு வண்டியில் ஓடிக் கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார். நடிகர் வண்டியை விட இசையமைப்பாளர் வண்டிதான் பாராட்டும்படியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்து போன மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் மார்ச் 19ல் வெளிவந்த 'யூத்' படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றது. மார்ச் 27ல் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த 'ஹாப்பி ராஜ்' படம் வெளிவந்தது. படத்திற்கு வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பு என்றாலும் ரசிகர்கள் திரையுலகினர் என படத்திற்குக் கொஞ்சம் பாராட்டுக்களைத் தந்து வாழ்த்தினர்.

“அடுத்தடுத்த வாரங்களில் “ஹாப்பி ராஜ் மற்றும் யூத்”. பிரபஞ்சத்திற்கு நன்றி…வாட் எ மார்ச்,” என மகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார்.

அவரது இசையில் தற்போது “கர, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மண்டாடி, மகுடம்” ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !