உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மேட் இன் கொரியா' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பாராட்டு

'மேட் இன் கொரியா' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பாராட்டு

ரா கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் 'மேட் இன் கொரியா'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மூன்றாவது வாரத்திலும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தற்போது வரை இப்படத்திற்கு 13 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது பாராட்டு தெரிவித்து, “மேட் இன் கொரியா, எத்தனை புத்துணர்ச்சியூட்டும், மனதிற்கு இதமான ஒரு திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சார், மனித உறவுகள் மொழி கடந்து நிற்கின்றன என்பதை மிக அழகாக சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரசன்ன குமார் ஒளிப்பதிவு மிக அற்வுதம். வேடிக்கை, உணர்ச்சி மற்றும் தீவிரத் தன்மை ஆகியவற்றின் கலவையாக பிரியங்கா மோகன் மிகச் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் தள பதிவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் ரா கார்த்திக், “சார்..மிக்க நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அழைத்து அரை மணி நேரத்திற்கும் மேலாக, ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், வசனம் பற்றியும் எனர்ஜியுடன் விவரமாகப் பேசினீர்கள். அது என்னை உண்மையில் மகிழ்ச்சியடைய வைத்தது,” என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !