உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஷார்ட்ஸ்' வீடியோக்களால் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள்

'ஷார்ட்ஸ்' வீடியோக்களால் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள்


திரையுலகில் இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை நடந்தால் அதில் கலந்து கொள்ளும் நடிகைகள் அதிக கவனத்தை ஈர்ப்பார்கள். அது காலம் காலமாக பொதுவாக நடக்கும் ஒன்றுதான். அனைவரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே சில நடிகைகள் கிளாமர் ஆடை அணிந்து வருவார்கள்.

அந்தக் காலத்தில் அவை புகைப்படங்களாக மட்டுமே வெளிவந்தன. அவற்றையும் பத்திரிகைகளில் அப்படியே வெளியிட்டுவிட முடியாது. சில புகைப்படங்கள் கிளாமர் என்பதற்கும் ஆபாசம் என்பதற்கும் இடைபட்டதாக இருக்கும். அதனால், பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்துவிடுவார்கள்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இணையதளங்கள் பிரபலமான போது அந்தப் புகைப்படங்கள், விதவிதமான போஸ்களுடன் ஒரு ஆல்பம் ஆக 'கேலரி' வடிவில் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டது. அதைப் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. அதனால், இணையதளங்களுக்கான பார்வைகளும் அதிகரித்தது.

அந்த இணையதள கேலரிகள் தற்போது யுடியூப் தளங்களில் 'ஷார்ட்ஸ்' வடிவங்களில் மாறிவிட்டது. நடிகைகள் நடந்து வருவது, மற்றவர்களுடன் பேசி சிரிப்பது, மேடைகளில் அமர்ந்திருப்பது, பேசுவது என விதவிதமான கோணங்களில், அவர்களை வீடியோ எடுத்து வெளியிடுவதுதான் இப்போதைய டிரெண்ட். அதற்குப் பொருத்தமான சினிமா பாடல்கள் வேறு.

இதற்காகவே பலர் மொபைல் போனும், கையுமாக சுற்றி வருகின்றனர். இதில் சில நடிகைகளின் வீடியோக்கள் சில பல காரணங்களால் வைரல் ஆகின்றன. அப்படியான வைரல்களில் சமீபத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' கதாநாயகி பிராத்தனா நாதன், 'டிராகன்' பட கதாநாயகி கயாடு லோஹர் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்த வைரல் வீடியோ வரும் வரை இவர்களது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறையவே சுற்றி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !