உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை மறந்துபோய் விட்டதாகவே நினைத்தேன் ; இசையமைப்பாளர் மணிசர்மா நெகிழ்ச்சி

இசை மறந்துபோய் விட்டதாகவே நினைத்தேன் ; இசையமைப்பாளர் மணிசர்மா நெகிழ்ச்சி


தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் மணிசர்மா. குறிப்பாக தமிழில் விஜய்க்கு 'ஷாஜகான், யூத், போக்கிரி' உள்ளிட்ட படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தவர், அதேசமயம் சமீப வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மணிசர்மா விரைவில் வெளியாக இருக்கும் 'சென்னை லவ் ஸ்டோரி' படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம், தான் மீண்டும் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிசர்மா, “படத்தின் இயக்குனர் சாய் ராஜேஷ் என் வீடு தேடி வந்து இந்த கதையை என்னிடம் சொன்னபோது, எதற்காக இதை என்னிடம் சொல்கிறார்.. நான் இதில் என்ன வேலை பார்க்க வேண்டும் என நினைக்கிறார் என்கிற சந்தேகத்துடன் தான் கேட்டேன். ஆனால் அவரோ இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்கிறீர்கள் என்று சொன்னார்.

என்னுடைய ஆர்மோனியம் எங்கே இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது என்று நான் சொன்னேன். உடனே அவரே என் வீட்டிற்குள் தேடிப் பார்த்து ஆர்மோனியத்தை எடுத்துக்கொண்டு வந்து சுத்தம் செய்து கொடுத்தார். அதில் ஒரு டியூன் போட்டதும் தான் இசை எனக்குள்ளே இருக்கிறது, இன்னும் மறக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.. அடுத்தடுத்து இந்த படத்திற்கு பல அழகான டியூன்களை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !