உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யை நேரடியாக தாக்கும் நட்டி படம்

விஜய்யை நேரடியாக தாக்கும் நட்டி படம்


தம்பி ராமய்யாவின் மகனும், அர்ஜூனின் மருமகனுமான உமாபதி ராமய்யா இயக்கி உள்ள படம் 'டிஎன் 2026' (தமிழ்நாடு 2026). இதில் நட்டி நட்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட பலர் நடித்துள்ளனர்.

இது ஒரு அரசியல் கிண்டல் படம், ஒரு சினிமா நடிகர் திடீரென அரசியலுக்கு வருவதும் அது தொடர்பாக நடக்கும் சம்பவங்களும்தான் படம். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் நட்டி நடிகர் தங்க நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு வருவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் போன்ற மேனரிசம், அவரைப்போன்ற ஆடைகள் அணிந்து படம் முழுக்க வருகிறார் நட்டி. தாடி, மீசை கூட விஜய்யையே நினைவு படுத்துகிறது. தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் புஸ்சி ஆனந்தை நினைவூட்டுகிறது.

சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்காக சத்தமே இல்லாமல் இந்த படத்தை தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !