ஹீரோவான விநாயகராஜ்
ADDED : 145 days ago
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லாக் டவுன்' என்ற படத்தில், டாக்டர் கேரக்டரில் நடித்தவர் விநாயகராஜ். இதற்கு முன் 'திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3, லைன்மேன்' ஆகிய படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் ஹீரோவாகி உள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 'உயிரிலே கலந்தது' என்ற படத்தை இயக்கிய கே.ஆர்.ஜெயா இயக்குகிறார். 2000மாவது ஆண்டில் இந்த படம் வெளியானது. இவரின் புதிய படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படுகிறது.