உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிகண்டன், தேசிங்கு பெரியசாமி படத்தை தயாரிக்கும் குடும்பஸ்தன் நிறுவனம்

மணிகண்டன், தேசிங்கு பெரியசாமி படத்தை தயாரிக்கும் குடும்பஸ்தன் நிறுவனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்குவதற்கான முன் தயாரிப்பு பணிகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார். முதலில் கமல் தயாரிக்க, சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் கமல் நிறுவனம் விலகிக் கொள்ள சிம்புவே தயாரித்து நடிப்பது என முடிவானது.

இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இதன் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட, தற்காலிகமாக இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையில் ஒரு மீடியம் பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. இதில் நாயகனாக குட் நைட் மணிகண்டன் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை குடும்பஸ்தன் படத்தை தயாரித்த சினிமாக்காரன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறைந்த பட்ஜெட் படமாக இருக்கும் என பலர் நினைத்த நிலையில் இது சுமாராக ரூ. 40 கோடியில் உருவாகும் படம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !