‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார்
நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் அவர் அடுத்து நடிக்கும் படத்தலைப்பு அறிவிக்கப்பட்டது. அதை தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சரண் உள்ளிட்டோர் படத்தலைப்பை அறிமுகம் செய்தனர். இந்த படத்தில் ரஞ்ஜன் என்ற டைட்டில் கேரக்டரில் வக்கீலாக பிரசாந்த் நடிக்கிறார்.
இளஞ் காதல் ஜோடிகளாக தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி, நடிகை தேவயானி மகள் பிரியங்கா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பிரசாந்த்தை படக்குழுவை வாழ்த்தினார்.
நான் சின்ன வயதில் ரசித்த ஹீரோ, அவருக்கு அவ்வளவு ரசிகைகள். தயாரிப்பாளர் சங்கத்தில் என்னுடன் பணியாற்றிய கதிரேசன் மகன் ஹரி ஹீரோ ஆகிறார். நான் தென் மாவட்டம் சென்றால் தேவயானி சீரியலை மக்கள் ரசிப்பதை பார்த்து இருக்கிறேன். அவர் மகள் பிரியங்காவுக்கும் வாழ்த்துகள். ஜி வி பிரகாஷ் நடித்த ஹாப்பிராஜ் ஆந்திராவில் கூட ரீச் ஆகியுள்ளது. அவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் நானி வெளியிட்ட படம் ‛கோர்'. தெலுங்கில் ஹிட் அடித்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தியாகராஜன் இயக்கி, தயாரிக்கிறார்.
இதை நினைக்கலை
விழாவில் தேவயானி பேசுகையில், ‛‛என் மகளை ஹீரோயின் ஆக்கிய தியாகராஜனுக்கு நன்றி. அப்பு படத்தில் பிரசாந்துடன் நடிக்கும் போது என் மகள் அவர் கம்பெனியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கவில்லை. என் மகள் கடுமையாக உழைப்பார். நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி பெரிய நடிகை ஆவார். என்றார்.
தங்கை பிரியங்காவை அக்கா இனியாவும் வாழ்த்தினார். ஒரு எக்சாம் எழுதிவிட்டு வேகமாக வாழ்த்த ஓடி வந்தேன் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட பலரும் பிரியங்காவை வாழ்த்தினர். படத்தில் வக்கீலாக நடிக்கும் பிரசாந்துக்கு ஜோடி கிடையாது என தகவல்.