'கருப்பு' படத்தில் நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்த அஜு வர்கீஸ்
சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலையாள நட்சத்திரங்களின் பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் நடிகர்கள் இந்திரன்ஸ், அஜு வர்க்கீஸ், உன்னி மாயா பிரசாத் மற்றும் 'லப்பர் பந்து' புகழ் சுவாசிகா என நான்கு மலையாள நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் நடிகர் அஜு வர்கீஸ் ஒரே ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'பறந்து போ' படத்திலும் விரைவில் வெளியாகவுள்ள 'மூன் வாக்' படத்திலும் நடித்தவர்.
சமீபத்தில் கருப்பு பட புரமோஷனில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி, அஜு வர்கீஸ் குறித்துக் கூறும்போது, அஜு வர்கீஸ் எனது மிக நெருங்கிய நண்பர். ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்குமாறு நான் கேட்டவுடன் அவர் உடனே சம்மதித்து நடித்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெறவில்லை. நண்பனுக்காக ஒரு நாள் படப்பிடிப்பில் வந்து நடித்துக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.