உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!


மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருவதைக் கடந்து தற்போது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் தமிழில் எப்போது அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தமிழ் சினிமாவில் இருந்து சில ஹீரோக்கள், இயக்குனர்கள் அதனை முன் எடுத்தனர். ஆனால், அவை எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி கபூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்கிறார்கள். இப்படத்தை, குறும்பட இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !