'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்!
ADDED : 5 hours ago
நான்காவது முறையாக 'புருஷன்' படத்திற்காக நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து தமன்னா, யோகி பாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கோவா ஆகிய பகுதிகளில் படமாக்கினர். இதைத்தொடர்ந்து சுந்தர்.சி அரசியல் பிரசாரத்தில் பிஸியானதால் புருஷன் படப்பிடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டார். இந்த நிலையில் புருஷன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது கொல்கட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பை இம்மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்கிற திட்டமிடலுடன் சுந்தர்.சி தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்கிறார்கள்.