உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?

தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா?


நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த படத்தை இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை வாரத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். இப்போது மீண்டும் தனுஷ், சிவகார்த்திகேயன் படம் நேருக்கு நேர் மோத வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !