அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள்
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அது மட்டுமல்லாது, என்டிஆர், ராம் சரண் ஆகியோரையும் பான் இந்தியா நடிகர்களாக உயர்த்தியது.
அதன்பின் அவர்கள் நடித்து வெளிவரும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்களது அடுத்த படங்களின் முன்னோட்ட வீடியோக்களால் இந்த 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் இந்தியத் திரையுலகத்தையே கலக்கி வருகிறார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ராம் சரண் நடித்துள்ள 'பெத்தி' படத்தின் டிரைலர் வெளியானது. அது தெலுங்கில் 52 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 35 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் இரவு வெளியானது. அது தெலுங்கில் 49 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 13 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
இந்த இரண்டு படங்களும் வெளியாகும் போது ஹிந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.