ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த 'சாருகேசி' படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஒய். ஜி. மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சாருகேசி தேவா இசையமைத்துள்ளார்.
ஒய். ஜி. மகேந்திரன் நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமே சாருகேசி. இந்த செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தில் உருவாகி உள்ளது. சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற படங்களின் வரிசையில் இசை பின்னணியில் உருவாகி உள்ளது.
பாடல்கள், டிரைலர் வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஜீன் 12ம் தேதி உலகம் முழுவதும் 'சாருகேசி' வெளியாகிறது.