உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒவ்வொருவரின் ஜாலியான காலத்தை சொல்லும் 'ஜியோ'

ஒவ்வொருவரின் ஜாலியான காலத்தை சொல்லும் 'ஜியோ'


இயக்குனர் ராஜேஷ் எம் மற்றும் ஜீவா இணைப்பில் 'சிவா மனசுல சக்தி' படம் வெளியாகி 16 வருடங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் படம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'. இப்​படத்​தில் இவா​னா, பரி​தாபங்​கள் சுதாகர் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். எம்​.சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார்.

இதை மலேசி​யா​வைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்​ரீம்ஸ் கார்ப்​பரேஷன் சார்​பில் டத்தோ அப்​துல் மாலிக் தயாரிக்​கிறார். காமெடி ஜார்னரில் படம் உருவாகி உள்ளது. சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு காமெடி ஜோடியாக சந்தானம் நடித்திருந்தார் இந்தப் படத்தில் யுடியூப் பிரபலம் 'பரிதாபங்கள்' கோபி நடிக்கிறார்.

தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் குறித்து ராஜேஷ் எம் கூறும்போது இது எனது பாணியிலான காமெடி படம். எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு காலகட்டத்திலாவது ஜாலியாக வாழ்ந்திருப்பார்கள். அந்த ஜாலியான காலத்தையும் அதன் பிறகான வாழ்க்கையும் காமெடியாக சொல்லும் படம். ஜீவா இப்போதும் அதே எனர்ஜியோடு இருக்கிறார். அவருடைய சிம்ப்ளிசிட்டி தான் படத்தின் பலம் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !