உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி'

ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி'

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிசி'.

'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் இப்படம் ஒரு வாரத்தில் சுமார் 70 கோடியை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சூர்யா நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷால் நடித்த 'மகுடம்' ஆகிய புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

இருந்தும், 'டிசி' படத்திற்கான வார இறுதி நாட்களுக்கான முன்பதிவு நன்றாகவே இருக்கிறது. ஆன்லைன் இணையதளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் 9 ஆயிரத்திற்கம் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று வெளியான 'மகுடம்' படத்திற்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகளே அந்த இணையத்தில் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 'டிசி' படத்திற்கு அதைவிட இரண்டு மடங்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியம்தான்.

75 கோடியை இந்தப் படம் கடப்பது உறுதி, ஆனால், இறுதி ஓட்டத்தில் 100ஐத் தொடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !