உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மண்டாடி' : 'உசுரே நீதான் புள்ள' பாடல் வெளியீடு

‛மண்டாடி' : 'உசுரே நீதான் புள்ள' பாடல் வெளியீடு

காமெடி நடிகராக வலம் வந்த சூரி இப்போது ஹீரோவாக வலம் வருகிறார். ‛விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி, மாமன்' என இந்த பட்டியல் நீள்கிறது. தற்போது அவரது நடிப்பில் அதிக பொருட்ச் செலவில் ‛மண்டாடி' என்ற படம் உருவாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்க, மகிமா நம்பியார் நாயகியாக நடிக்கிறார். மீனவர் வாழ்வு பின்னணியில் அவர்களுக்குள் நடக்கும் படகு போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியான நிலையில் இப்போது 'உசுரே நீதான் புள்ள' என்ற பாடல் வெளியாகியுள்ளது. காதல் பாடலாக உருவாகி உள்ள இதனை ஜெயஸ்ரீ மதிமாறன் பாடல் வரியை எழுதி உள்ளார். கபில் கபிலன், சஞ்சனா பாடி உள்ளனர். செப்., 10ம் தேதி படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !