உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஐட்டம் பாடல்' வாய்ப்புதான் வருகிறது : தமன்னா வருத்தம்

'ஐட்டம் பாடல்' வாய்ப்புதான் வருகிறது : தமன்னா வருத்தம்

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் அவர் நடனமாடிய 'காவாலய்யா' பாடல் சூப்பர் ஹிட்டானது. அது தவிர ஓரிரு படங்களில் இது போன்ற 'ஐட்டம் பாடல்களுக்கு' நடனமாடி இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

“சவால் தரும் கதாபாத்திரங்களை நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால், 'ஐட்டம் பாடல்களுக்கு' மட்டுமே என்னை அதிகம் அணுகுகிறார்கள். ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி ஒரு நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்குத் தர வேண்டும்.

காலத்திற்கேற்ப சினிமா மாறி வருகிறது. கதையின் தேவையில் முத்தக் காட்சிகள் இருந்தால் அதைத் தனிமைப்படுத்திப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது” என்றும் முத்தக் காட்சி பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !