உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கை என்றாலும் சலுகை காட்ட மாட்டேன் ; வருண் தேஜ்

தங்கை என்றாலும் சலுகை காட்ட மாட்டேன் ; வருண் தேஜ்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவரான நாகபாபுவின் மகன் வருண் தேஜ் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர். இவரது சகோதரி நிஹாரிகா கொனிடேலா ஒரு சில படங்களில் நடித்தவர், தற்போது தயாரிப்பாளராக மாறி 'பாரி' என்கிற திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தை யது வம்சி என்பவர் இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு கிராமத்து விளையாட்டுத் திரைப்படமாக இது உருவாகிறது.

அந்த வகையில் தனது சகோதரியின் தயாரிப்பிலேயே முதன்முறையாக நடிக்கிறார் வருண் தேஜ். உங்கள் சகோதரியின் தயாரிப்பில் நடிப்பதால் சம்பளத்தில் ஏதாவது தள்ளுபடி தருவீர்களா? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, எனது சகோதரிக்கு என்று எந்த சலுகையும் கிடைக்காது; அவர் எனக்கு முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பதிலளித்தார் வருண் தேஜ்.

இப்படத்திற்காக வாலிபால் பயிற்சி பெற்றபோது வருண் தேஜின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால், இதற்கான அறுவை சிகிச்சையையும் தற்போது அவர் செய்து கொண்டுள்ளார். அதனால் வாலிபால் விளையாட தகுதியான உடல்நிலையை பெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், இதன் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !