உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்செஷன் : செலவு 7 மில்லியன், வசூல் 500 மில்லியன்

அப்செஷன் : செலவு 7 மில்லியன், வசூல் 500 மில்லியன்

யூ டியூப் தளத்தில் குறும்படத்தை இயக்கிய அனுபவம் கொண்ட கர்ரி பார்க்கர் என்பவர் இயக்கத்தில், மைக்கேல் ஜான்ஸ்டன், இன்டே நவர்ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் மே 15ல் வெளியான ஹாரர் ஹாலிவுட் திரைப்படம் 'அப்செஷன்'.

சுமார் 7 மில்லியன் யுஎஸ் டாலர் தயாரிப்பில் உருவான இப்படம் தற்போது 500 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. அப்படியென்றால் எவ்வளவு லாபம் என கணக்கு போட்டுப் பாருங்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4780 கோடி. படத்தின் பட்ஜெட் வெறும் 67 கோடி. இந்தியாவில் மட்டுமே இப்படம் 100 கோடியை வசூலித்தது.

இப்படியான ஒரு வசூல் கடந்த பத்து வருடங்களில் இதுவே முதல் முறை என ஹாலிவுட் திரையுலகம் வியக்கிறது. சினிமாவில் வெற்றி என்பது எப்போது, எந்த வடிவில், எதனால் வரும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. தமிழ் சினிமாவிலும் இப்படியான அதிசயம் எப்போதே ஒரு முறை நடப்பதுண்டு.

பிரம்மாண்ட செலவு செய்து தோல்வியடையும் படங்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த செலவில் பிரம்மாண்ட வெற்றியை 'அப்செஷன்' பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !