குறுகிய காலத்தில் 'இஞ்சி வெல்லம்' படப்பிடிப்பை நிறைவு செய்த மணிரத்னம்!
விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள புதிய படம் 'இஞ்சி வெல்லம்'. இது ஒரு காதல் திரைப்படமாகும். கொல்கத்தாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது.
இந்த, இஞ்சி வெல்லம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 23ம் தேதி அன்று தொடங்கியது. மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பல இளம் இயக்குனர்கள் படப்பிடிப்பை முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டு, தயாரிப்பு செலவை அதிகரிக்கும் இந்த காலத்தில், மணிரத்னமோ சுறுசுறுப்புடன் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.
துல்லியமான திட்டமிடல் இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய டாக்கீஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.