இணையதளத்தில் லீக்கான வலிமை போட்டோ
ADDED : 1788 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை அப்டேட் பற்றி நச்சரித்து வருகின்றனர். ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகள் தவிர, படக்குழு வலிமை பற்றிய அப்டேட் எதுவும் தராமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் அஜித்துடன் நடிகை சுமித்ரா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் உள்ளனர். இதைப் பார்க்கும் போது அஜித்துக்கு அம்மாவாக சுமித்ரா நடிக்கிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.
படக்குழு அதிகாரப்பூர்வமாக வலிமை படம் பற்றி எந்த அப்டேட்டும் தராத நிலையில், சமூகவலைதளத்தில் கசிந்த இந்த புகைப்படத்தால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.