உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விளையாட்டு படத்தில் துருவ் விக்ரம்

விளையாட்டு படத்தில் துருவ் விக்ரம்

'பரியேறும் பெருமாள்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் படத்தை மாரி இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது விளையாட்டை மையப்படுத்திய படம் என கூறப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா' மூலம் துருவ் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'விக்ரம் 60' படத்தில் துருவ் நடித்து வருகிறார். இதில் துருவுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு மாரி செல்வராஜ் படத்தில் துருவ் நடிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !