பட்ஜெட்டை மீறும் ராதே ஷ்யாம் : கவலையில் பிரபாஸ்
                                ADDED :  1760 days ago     
                            
                             பாகுபலி என்கிற வரலாற்று படத்தைத் தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக் பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகி வருவதால் படத்தின் நாயகன் பிரபாஸ் கவலையில் இருக்கிறாராம். இதுவரையிலான செலவு மட்டுமே சுமார் 250 கோடியை தாண்டியுள்ளதாம்.. ஏற்கனவே தனது சாஹோ படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், ஆக்சன் படமாக இல்லாமல், முழுக்க முழுக்க காதல் கதையாக இந்த ராதே ஷ்யாம் உருவாகி வருவது தான் பிரபாஸின் கவலைக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.