நந்திதாவின் லட்சியம்!
ADDED : 1766 days ago
ஈஸ்வரன் படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்தவர், நந்திதா ஸ்வேதா.ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது:சினிமா துறைக்கு வரும் போது, அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு, சூப்பர் ஸ்டார், கமல், விஜய், அஜித் போன்றோருடன் நடிக்க வேண்டும் என, லட்சியம் இருந்தது.விஜயுடன், புலி படத்தில் நடித்தேன். சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக, லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன். விரைவில் மற்றவர்களுடனும் நடிப்பேன். ஈஸ்வரன் படத்தில், நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.