சுபிக் ஷாவின் நெகிழ்ச்சி!
ADDED : 1736 days ago
யார் இவர்கள் படத்தில் நடித்தவர் சுபிக் ஷா. இவர், படப்பிடிப்பின்போது ஒருநாள், 'மேக் அப்' போட்டபடி சென்றுள்ளார். இதை கவனித்த இயக்குனர் பாலாஜி சக்திவேல், தண்ணீரால் சுபிக் ஷாவின் முகத்தை கழுவி விட்டு, 'உங்களது ஒரிஜினலே போதும்' எனக் கூறியுள்ளார்.பாலாஜி சக்திவேலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து, வீடியோவை வெளியிட்டார் நடிகை சுபிக் ஷா.இது குறித்து அவர் கூறுகையில், ''படக்குழுவில் உள்ள அனைவரையும், தன் மகள், மகனாகவே பார்த்துக் கொண்டார், பாலாஜி சக்திவேல். அவரது இயக்கத்தில் நடித்தது, பெருமையாக உள்ளது,'' என்றார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.