ஒரே ஷாட்டில் படமாகும் யுத்த காண்டம்
ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்கும் பாணி ஹாலிவுட்டுக்கு ரொம்பவே பழசு. தமிழில் அகடம் என்ற படம் தான் முதல் சிங்கிள் ஷாட் படம். அதன்பிறகும் சில படங்கள் வெளிவந்தது. ஆனால் அவைகள் அகடம் அளவிற்கு பேசப்படவில்லை. தற்போது ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் சிங்கிள் ஷாட் படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். வேறு சிலரும் அந்த முயற்சியில் இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் யுத்த காண்டம்.
இந்தப் படத்தில் கன்னிமாடம் படத்தில் அறிமுகமான ஸ்ரீராம் கார்த்திக், கோலிசோடா வில்லன் கிரிஷ் கரூப், யோக் ஜேப்பி, சுரேஷ் மேனன், போஸ்வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆனந்தராஜன் இயக்குகிறார். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார், போஸ் வெங்கட் வசனம், பாடல்களை எழுதுகிறார். ஹரி சாய் இசை அமைக்கிறார். பத்மாவதி, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ இணைந்து தயாரிக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக படத்தின் ஒத்திகை நடந்த வந்தது, விரைவில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.