உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபலத்தின் 'கே.ஜி.எப்., - 2' அனுபவம்!

பிரபலத்தின் 'கே.ஜி.எப்., - 2' அனுபவம்!

'ஹோம்பேல் பிலிம்ஸ்' தயாரிக்கும் கே.ஜி.எப்., - 2 படத்தின், 'டீசர்' நாளை வெளியாக உள்ளது. யஷ் நடிக்கும் இப்படத்தில், முதன்முறையாக அவருடன் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் இணைந்து நடித்து உள்ளார்.இது குறித்து, அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாவது:யஷ் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நடித்த அனுபவம் பிரமாதமானது. அவருடைய திறமைகள் வியக்கத்தக்கது. அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. திரையில் என்னை, யஷ் உடன் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். படத்தில் என் கதாபாத்திரம் வித்தியாசமானது. அழுத்தமான அந்த கதாபாத்திரத்தின் போக்கை, அவ்வளவு எளிதாக ரசிகர்கள் கணித்துவிட முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !