பொங்கல் ரிலீசாக ரவீனா படங்கள்!
ADDED : 1736 days ago
நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட, முன்னணி நாயகியருக்கு பின்னணி குரல் கொடுப்பவர், ரவீனா ரவி. ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துஉள்ளார்.இந்த பொங்கலுக்கு, இவர் பின்னணி குரல் கொடுத்த, மூன்று படங்கள் வெளியாகின்றன. மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கும், ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில், நித்தி அகர்வாலுக்கும், இவர் பின்னணி பேசியுள்ளார். இந்த மூன்று படங்களும், பொங்கலை முன்னிட்டு வெளியாகின்றன.