கேஜிஎப்-2 டீசர் வெளியானது
ADDED : 1732 days ago
கே.ஜி.எப்., - 2 படத்தின், ‛டீசர்', இணையதளங்களில் லீக் ஆனதை தொடர்ந்து, படக்குழுவினர் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
‛ஹோம்பாலே பிலிம்ஸ்' தயாரிக்கும், கே.ஜி.எப்., - 2 படத்தின் ‛டீசர்' ஜன., 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு 8ம் தேதி, காலை 10.18 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இணையத்தில் படத்தின் டீசர் கசிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அதிகாரப்பூர்வமாக டீசரை வெளியிட்டுள்ளனர். 2.16 நிமிடங்கள் ஓடும் படத்தின் டீசர், படு மிரட்டலாக உள்ளது.