உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மண்வாசம் பேசும் 'சிவப்பு மனிதர்கள்!'

மண்வாசம் பேசும் 'சிவப்பு மனிதர்கள்!'

தமிழக தென்மாவட்ட மக்களின், வீரம், குடும்ப உறவு, நட்பு, காதல் உள்ளிட்ட அனைத்தையும், யதார்த்தமாக சமூக அக்கறையோடு உருவாக்கப்பட்ட படம், சிவப்பு மனிதர்கள். இதில், உள்ளாட்சி தேர்தலும், அதில் தலைதுாக்கும் $hjp அரசியலை விளக்கும் காட்சிகளையும் இணைத்துள்ளதாக, படக்குழுவினர் கூறியுள்ளனர்.படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி அன்புசரவணன் இயக்கியுள்ளார். பி.டி.அரசகுமார் தயாரிக்கும் இப்படத்தில், ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி, புதுமுகம் சத்யா, அனுகிருஷ்ணா, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச்சில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !