தனுஷ் - கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்
இயக்குனர் கார்த்திக் நரேன், தனுஷ் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட தனுஷின் 43வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜன., 8) முதல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்த ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கான நடன ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நடன இயக்குனர் ஜானி மேற்பார்வையில் அதற்கான பயிற்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.
முதலில் தனுஷ் பாடியுள்ள பாடல் ஒன்றைப் படமாக்குவதுடன் இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது ஒரு அதிரடியான பாடல் அது என ஜிவி பிரகாஷ் அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் நடித்து முடித்துள்ள 'ஜகமே தந்திரம், கர்ணன்' ஆகியவை விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.