விஜய்யின் தேடல் : லோகேஷ் கனகராஜ்
ADDED : 1731 days ago
பிரமாண்டமான கதை என்பதை விட, பிரமாதமான கதையில் நடிக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு அதிகமாக உள்ளது. அவரிடத்தில் கதை சொல்லும்போது அதில் ஒரு சின்ன பொறி கிடைத்தாலும் போதும் அதை அப்படியே டெவலப் பண்ணுங்க என்று எனர்ஜி கொடுக்கிறார் விஜய். அப்படித்தான் மாஸ்டர் படம் உருவாவதற்கு முன்பு நடந்தது. அதேபோல்தான் இப்போது நெல்சன் சொன்ன ஒரு கரு பிடித்து விட உடனே ஓகே பண்ணி விட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், புதிய வரவு இயக்குனர்களிடம் ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கும் என்கிற தேடலில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்.