உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்துவிட்டு தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, அதன்பிறகு தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இநந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெலுங்கு சினிமா கதவுகளும் திறந்திருக்கிறது. தெலுங்கில் கோபி கணேஷ் பட்டாபி இயக்கத்தில் சத்யதேவ் நடிக்கும் கோட்சே என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஆக்டிங் ஸ்கோப் உள்ள ஹீரோயினியாக, தான் நடிப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !