சூரியை வெற்றிமாறன் தேர்வு செய்தது ஏன்?
ADDED : 1731 days ago
தனுஷ் நடித்த அசுரன் படத்தை பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை தழுவி இயக்கிய வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து தயாரித்து, இயக்கி வரும் படத்தை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு காமெடியன் சூரியை ஏன் வெற்றிமாறன் நாயகனாக தேர்வு செய்தார் என்கிற கேள்வி பலரிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த படத்தில் சூரிநடிப்பது மாஸ் ஹீரோ கதையில் அல்ல, பலூன் விற்று தனது குடும்பத்தை காப்பாற்றும் ஒருவரைப்பற்றிய கதை. வாழ்வியல் யதார்த்தங்களை பேசும் கதை. அதனால்தான் இந்த கதைக்கு சூரியை தேர்வு செய்திருக்கிறார் வெற்றிமாறன்.