உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை அனுசுயா பரத்வாஜிற்கு கொரோனா அறிகுறி

நடிகை அனுசுயா பரத்வாஜிற்கு கொரோனா அறிகுறி

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். கஷ்ணம், காயத்ரி, ரங்கஸ்தலம், யாத்ரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளினியாகவும் உள்ளார். தற்போது ஆச்சார்யா, புஷ்பா படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ''எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். விரைவில் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள், என்னுடன் கைகுலுக்கியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !