வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை
ADDED : 1722 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வரும் நிலையில் இப்போது நாயகியாக ஜிவி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமீபத்தில் ஒடிடியில் வெளியான ஆந்தாலாஜி படமான பாவக்கதைகள்-ல் தங்கம் பகுதியில் இவர் நடித்திருந்தார். அதேப்போன்று க/பெ.ரணசிங்கம் படத்திலும் இவர் நடித்தார்.