நானே வருவேன் : தனுசுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?
ADDED : 1765 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படம் தனுஷின் கேரியரில் இன்னொரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகப்போகிறது.
இந்நிலையில், இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளை பரிசீலித்து வந்த செல்வராகவன், இப்போது தமன்னாவிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு தனுசுடன் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களில் நடித்துள்ள தமன்னா மூன்றாவது முறையாக நானே வருவேன் படத்தில் அவருடன் இணையப்போகிறார்.