ரசிகரின் வீடுதேடி சென்று சந்தித்த ரக்சிதா
ADDED : 1726 days ago
பெங்களூரை சேர்ந்தவர் ரக்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு சரவணன் மீனாட்சியில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் நடித்தார்.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் இவரது தீவிர ரசிகராக இருந்துள்ளார். அவர் ரக்சிதாவை சந்திக்கும் ஆசையில் இருந்திருக்கிறார். இதனை அவரது குடும்பத்தினர் மூலம் அறிந்து கொண்ட ரக்சிதா, அந்த ரசிகரின் வீட்டுக்கு சர்ப்ரைசாக சென்று தனது அன்பை வெளிப்படுத்தினார். அவருக்கு புத்தாடைகளும், இனிப்பும் வழங்கினார். இந்த வீடியோ தற்போது வெளியாக வைரலாக பரவி வருகிறது.