தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன்
ADDED : 1734 days ago
துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாபியா படங்களை அடுத்து தற்போது தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இவற்றில் நரகாசூரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அருண் விஜய்-பிரசன்னா நடிப்பில் வெளியான மாபியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தனுஷின் 43வது படத்தை எப்படியாவது ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் நரேன். அதன்காரணமாக, இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற மலையாளத்தில் வைரஸ் உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய சர்பு மற்றும் சுகாஷ் ஆகியோரை இப்படத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கார்த்திக் நரேன்.